வித்யா கொலைக்குற்றவாளியின் முகம் சுழிக்க வைக்கும் செயல் - சிறைக்குள் நடந்தது என்ன..!
வித்யா கொலை வழக்கு குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பல்லேகலையிலுள்ள தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தனக்கு சிகிச்சை அளித்த, பெண் வைத்தியரிடம் பாலியல் அத்துமீறல் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி கைதியைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளையில், குறித்த கைதி திடீரென வைத்தியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த உடனே அங்கிருந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாகச் செயற்பட்டு கைதியைக் கட்டுப்படுத்தினர்.
இதனால் பெண் வைத்தியர் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வித்யா கொலை வழக்கு குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த விடயம் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..