5 நாட்களில் 4 முறை சவூதிக்கு அடுத்தடுத்து தாக்குதல்! வெளியான சிசிரிவி காட்சிகள்...
சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹூதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
யேமனைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பு நடத்தியதாகக் கூறப்படும் முந்தைய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்த மறுநாளே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மிகக் கொடிய தாக்குதல்
சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் தகவலின்படி, அடையாளம் காணப்படாத ஏவுகணைப் பொருள் ஒன்று கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையத்தைத் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புப் படையினர் குரூஸ் ஏவுகணை ஒன்றையும் இடைமறித்துள்ளனர்.
Terminal 4 of King Khalid International Airport, Riyadh, has been directly struck by a Yemeni cruise missile There are dozens of casualties, this is the second day in a row of such attacks. Houthis have warned travelers of more attacks to come. #Riyadh #SaudiArabia #Houthis https://t.co/M3yuEs9r94
— 𝔗𝔥𝔢 𝔇𝔞𝔦𝔩𝔶 𝔇𝔦𝔰𝔰𝔦𝔡𝔢𝔫𝔱 (@DailyD1ss1dent) October 11, 2026
கடந்த ஒரு வார காலப்பகுதியில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஐந்து நாட்களில் விமான நிலையம் நான்கு தடவைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல், ஈரான் போர் ஆரம்பித்ததிலிருந்து சவூதி அரேபிய மண்ணில் இடம்பெற்ற மிகக் கொடிய தாக்குதலாகக் கருதப்படுகிறது.
அந்தத் தாக்குதலில் 300 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெமரா காட்சிகள்
இந்தத் தாக்குதல் இடம்பெற்ற தருணத்தைக் காண்பிக்கும் கண்காணிப்பு கெமரா காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
விமானங்களில் ஏறுவதற்குத் தயாராக இருந்த உம்ரா யாத்திரிகர்கள் உள்ளிட்ட பயணிகள் காத்திருந்தபோது, திடீரென ஏற்பட்ட பிரகாசமான செம்மஞ்சள் நிற ஒளி மற்றும் வெடிப்பைத் தொடர்ந்து பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடியதை அந்தக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.[
From airport CCTV, the moment Shia Yemeni Missiles hit the Riyadh Airport yesterday, killing 14 persons including Umrah pilgrims. Now no religion is safe, everyone is being taken away 😭💔 https://t.co/maGMbhFvik
— RASHMIKA SAHAY (@RASHMIKA_003) October 12, 2026
மேலும், விமான நிலையத்தின் கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.
ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹூதி அமைப்பு, கடந்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளது. சவூதி அரேபியாவின் போக்குவரத்து மையங்களைத் தொடர்ந்து இலக்குவைப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
குறித்த விமான நிலையங்கள் தமது படைகளின் செயற்பாட்டுக் களமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஹூதி அமைப்புக்கு எதிரான கூட்டணி, இந்தத் தாக்குதலை “முழுமையான போர்க்குற்றம்” எனக் கண்டித்துள்ளதுடன், தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல விமான நிறுவனங்கள் சவூதி அரேபிய விமான நிலையங்களுக்கான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் தூதரகங்களும், விமான நிலையங்களைப் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்கள் குறித்து தமது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
சவூதி அரேபியாவே காரணம்
இதற்கிடையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் தலைநகர் சனாவில் அமைந்துள்ள விமான நிலையம் மீண்டும் தாக்கப்பட்டதாக ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு சவூதி அரேபியாவே காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவும் சனாவில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹூதிகளின் அல்-மசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து சவூதி அரேபியா இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.
பல பில்லியன் டொலர்களைத் தனது இராணுவத்திற்காகச் செலவிட்டுள்ள சவூதி அரேபியா, தொடர்ச்சியான ஹூதி தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது.

யேமன் போரில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்திற்கு நீண்டகாலமாக இராணுவ ஆதரவு வழங்கி வரும் ரியாத், தற்போது மேலும் தீவிரமடையும் மோதலின் மையத்தில் சிக்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹூதி அமைப்புக்கு எதிரான போரில் அமெரிக்கா நேரடியாக இணைவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ள நிலையில், இந்த மோதல் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்தப் போரின் தாக்கம் உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலைகள், ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் முக்கிய கடல்வழிப் பாதையில் இடம்பெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து, அத்துடன் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றிலும் பிரதிபலிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri