சீன இராணுவத்தினரை குறிவைத்து சிஐஏ வெளியிட்ட புதிய காணொளியால் சர்ச்சை
அமெரிக்காவின் மத்திய உளவுத்துறையான சிஐஏ, சீன இராணுவ அதிகாரிகளை தங்கள் நாட்டிற்கு ஆதரவாக உளவு பார்க்கத் தூண்டும் வகையில் புதிய சீன மொழி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த காணொளியில்,
சீனா கடும் எதிர்ப்பு
சீன அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் தலைமை மீது அதிருப்தி கொண்ட ஒரு கற்பனை இராணுவ அதிகாரி சிஐஏ-வை தொடர்பு கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

"சீனத் தலைமை தங்களின் சுயநலத்தைப் பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளது" என்றும், "இந்த மதியற்றவர்கள் எனது மகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்க முடியாது" என்றும் அந்த அதிகாரி கூறுவது போல காணொளி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 'டார்க் வெப்' மூலம் பாதுகாப்பான முறையில் சிஐஏ-வை எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதற்கான வழிமுறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முயற்சி
அமெரிக்காவின் இத்தகைய முயற்சிகள் "தீங்கிழைக்கும் அவதூறுகள்" என்றும், சீன அதிகாரிகளை வஞ்சகமாக கவர்ந்து தங்களைச் சரணடையச் செய்யும் முயற்சி என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.

குறிப்பாக, சீன இராணுவத்தில் ஊழலுக்கு எதிரான விசாரணைகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டு வரும் ஒரு இக்கட்டான சூழலில், சிஐஏ இந்த காணொளியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனாவில் இருந்த சிஐஏ-வின் உளவு வலையமைப்பை பெய்ஜிங் வெற்றிகரமாக முறியடித்த நிலையில், தற்போது மீண்டும் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா இந்த டிஜிட்டல் உத்திகளைக் கையாண்டு வருகிறது.