யாழில் மகனின் மனைவியால் தாய்க்கு நேர்ந்த கதி! வேதனையளிக்கும் காணொளி - பெண் கைது
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிப பெண்ணொருவர் மீது குறித்த பெண்ணின் மருமகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த கொடிகாமம் பொலிஸார், தாக்குதல் நடத்திய பெண்ணை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைகளுக்கு பின்னர் குறித்த நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - தீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) கொடிகாமத்தில் தனது மருமகளினால் தாக்கப்படும் பெண் ஒருவரின் காணொளி பலரதும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தக் காணொளியில், மரக்குச்சி ஒன்றின் மூலம் குறித்த பெண் சரமாரியாக தாக்கப்படுகின்றார்.
எனினும், இது குறித்து பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள்
இந்நிலையில், இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் பலரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூகத்தில் தாய்மார்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற போதிலும் இது போன்ற சம்பவங்கள் சமூகத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதுடன் கண்டனத்துக்குரியனவாகவும் உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
