தென்னிலங்கையில் மற்றுமொரு வன்முறை: இசை நிகழ்ச்சியில் மோதல் - ஒருவர் பலி - 5 பேர் காயம்
ஹம்பாந்தோட்டை, வீரகட்டிய மொராய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மொராய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் முடிவில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இசை நிகழ்ச்சியில் மோதல்
உயிரிழந்தவர் வீரகட்டிய மொரய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த மோதலில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் தங்காலை மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களது நிலைமை மோசமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
