பாடசாலை மாணவர்கள் மத்தியில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
பாடசாலை மாணவர்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியல் வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
தரம் ஆறு முதல் அதற்கு மேற்பட்ட தரங்களில் கற்கும் மாணவர்கள் மத்தியில் இவ்வாறு மோதல்கள் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் காண்பிக்கப்படும் வன்முறைகள், சண்டைகள், துப்பாக்கிச்சூடுகள், பழிவாங்குதல்கள் உள்ளிட்ட காட்சிகளை பார்வையிடுதல் மற்றும் வீடியோ கேம்கள் மூலமாக மாணவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடியோ கேம்களினால் ஏற்படக்கூடிய ஆபத்து
தற்பொழுது தரம் ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புக்களில் கற்கும் மாணவர்கள் பெற்றோரின் சொல்லை கேட்பதில்லை எனவும், மிகவும் கோபமாக நடந்து கொள்வதாகவும் அவர்களிடம் அலைபேசிகளை வழங்க வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வன்முறைக் காட்சிகளை பார்வையிடுவதன் மூலமும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் தொடர்பில் பெற்றொர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென டொக்டர் ரூமி ரூபன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |