கனடாவை உலுக்கிய படுகொலைகள் : அதிர்ச்சியில் இலங்கையர்கள்
கனேடிய தலைநகரான ஒட்டாவில் இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவா புறநகரான Barrhaven பகுதியில் 6 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தங்கள் சமூகம் பேசமுடியாது மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கனடா சங்கத்தின் முன்னாள் தலைவர் நாரத கொடித்துவக்கு, ஊடகங்களில் கருத்து வெளியிடுகையில், “நாங்கள் நொருங்கிய சமூகம், நாங்கள் இங்கு வாழ்வதற்காக வந்துள்ளோம்.
ஒட்டாவா படுகொலை
"நான் இன்று சுமார் 40, 50 பேரிடம் கலந்துரையாடினேன். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். நாம் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற ஒன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் முதல் இந்த குடும்பம் ஒட்டாவாவில் வாழ்ந்து வந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த தந்தையும் கணவரும் சமூகத்தில் ஒரு பெரிய உதவியாளர் எனவும் அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் நபராகும்.
“ஒரு அன்பான உள்ளம் கொண்டவர், மிகவும் நட்புடன், சமய விடயங்களுக்கு உதவி செய்தவர். நாங்கள் அவரைப் பற்றி கவலைப்படுகிறோம், ஏனென்றால் அவர் மட்டுமே அவரது குடும்பத்தில் மீதமாக உள்ளார்.
அவருக்கு உதவ ஒரு சமூகமாக நாங்கள் இருக்க விரும்புகிறோம்” என நாரத கொடித்துவக்கு, தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |