இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி!
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி, வடக்கு - கிழக்குக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பினால்..! கசிந்த இரகசிய உளவுத்துறை தகவல் - சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார்.
வடக்கு - கிழக்குக்கு விசேட விஜயம்
முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறப்படுகிறது.
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் இந்தியத் துணை ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam