ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பினால்..! கசிந்த இரகசிய உளவுத்துறை தகவல் - சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பினால் பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
சீனா மறுப்பு
சீனா இந்த ஏவுகணையை நேரடியாக அனுப்பாமல் மூன்றாம் நாடுகள் வழியாக இரகசியமாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ஏற்றுமதியின் உண்மையான இடத்தை மறைக்க முயற்சி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
உண்மையற்ற தகவல்
இருப்பினும், சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் மோதலில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்புக்கும் சீனா ஒருபோதும் ஆயுதங்களை வழங்கியதில்லை. இந்த தகவல் உண்மையற்றது என்று கூறியுள்ளார்.
இதேவேளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பரபரப்பூட்டும் செய்திகளையும் வெளியிடுவதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார் - தேடப்படும் நபர்களுக்கு கடுமையாகும் சட்டம்
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri