வெசாக் பண்டிகையை முன்னிட்டு இடம்பெறும் தன்சல் நிகழ்வுகள்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு ஐஸ்கிறீம், தேநீர், பிஸ்கட், கடலை மற்றும் சோறு போன்ற உணவு பொருட்களை தானமாக வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கான ஐஸ் கிறீம் அன்னதானம் வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் (24) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளால் ஐஸ் கிறீம் அன்னதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இதனைத்தொடர்ந்து முல்லைத்தீவு வீதியூடாக செல்கின்ற பயணிகள் மற்றும் முல்லைத்தீவு கிராமத்தினுடைய மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலருக்கும் ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தி - தவசீலன், ஷான்
கிழக்கு மாவட்டங்கள்
இதற்கமைய, அம்பாறை - கல்முனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அம்பாறை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் பெருமளவான வெசாக் கூடுகள் தொங்க விடப்பட்டு பக்தி பாடல்கள் ஒலிபரப்பலுடன் குறித்த தானம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, இராணுவத்தினரால் மல்வத்தை, கல்முனை பகுதிகளில் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
இதன்போது, பிரதான வீதியினால் சென்ற பொதுமக்களுக்கு பிஸ்கட் மற்றும் தேனீர் குளிர்பானம் ஐஸ்கிறீம் என்பனவற்றையும் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படை , பொலிஸார், தானமாக வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் வெசாக் தினத்தை முன்னிட்டு 11ஆவது இராணுவ படைப்பிரிவினால் குருக்கள்மடம் முகாம் வளாகத்தில் வெசாக் தின நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, வெசாக் விளக்குப் போட்டியும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன் பொதுமக்களுக்காக விசேட தாக சாந்தி ஒழுங்குகளும் நடத்தப்பட்டுள்ளன.
செய்தி : நவோஜ்
யாழ்ப்பாணம்
அது மா்திரமன்றி, சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தினால் இன்றைய தினம் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வெசாக் பண்டிகைக்கான தன்சல் உணவு கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |