புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி இந்த ஆண்டிற்கான வெசாக் கொண்டாட்டங்கள்
இந்த ஆண்டுக்கான தேசிய வெசாக் கொண்டாட்டங்கள் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ளது.
அரசாங்க வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஹலாவத்த கபெல்வல ஸ்ரீ ரதனசிறி விகாரையில் கொண்டாட்டங்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் வெசாக் விழா
அரசாங்க வெசாக் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் அமைச்சர்களும் வெளிநாடுகளின் தூதுவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த வருடத்தின் வெசாக் தொனிப்பொருளானது “உனக்கே விளக்காக இரு” என்பதாகும்.
வெசாக் வார கொண்டாட்டங்கள் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
