மிகுந்த மன வருத்தத்தில் நிமால் லன்சா! மீண்டும் அமைச்சிற்கு செல்லும் உத்தேசமில்லை - அமைச்சர் அதிரடி முடிவு
தாம் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாகவும், மீண்டும் அமைச்சிற்குச் செல்லும் உத்தேசமில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த பின் தனது மன வேதனை குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சிலிருந்து பொருட்களை அகற்றிக் கொண்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானவை. அமைச்சிற்கு மீண்டும் செல்லும் உத்தேசமில்லை.
இதேவேளை, அமைச்சின் செயலாளருடன் கோபித்துக் கொண்டு இவ்வாறு பொருட்களை மூட்டைக் கட்டிக் கொண்டு அமைச்சை விட்டு வெளியேறுவது அரசியல்வாதிக்குப் பொருத்தமானதல்ல. சிறுபிள்ளைத்தனமானது என தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri