வேலணை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது (PHOTOS)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளரின் மேலதிக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின், வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்றைய தினம் சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றிருந்தது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர்.
பின்னர் சபையின் தவிசாளர் மேலதிகமாக ஒரு வாக்கினை செலுத்த முடியும் எனும் உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கு அமைவாக தவிசார் தனது வாக்கினை ஆதரவாக செலுத்தியதன் மூலம் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri