வேலன் சுவாமியின் வழக்கு விசாரணை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ். நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
பிணையில் விடுதலை
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் சோமபாலன், வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்க செயலாளர் ஜெனிற்றா ஆகியோர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கு விசாரணை 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மன்றில் ஆஐராகிய இருவரையும் பொலிசாரிடம் வாய் வாக்குமூலம் அளிக்குமாறு
நீதவான் உத்தரவிட்டார், வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி தவராசா ஆஜராகினார்,