புதிய 20 அம்ச அமைதித் திட்டத்தின் முக்கிய விபரங்களை முன்வைத்துள்ள உக்ரைன்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய 20 அம்ச அமைதித் திட்டத்தின் முக்கிய விபரங்களை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, கிழக்கு உக்ரைனில், உக்ரைன் இராணுவம் நிலை கொண்டுள்ள பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தூரம் பின்வாங்கவும், அதற்குப் பதிலாக அங்கு ‘இராணுவமற்ற வலயங்களை’ உருவாக்கவும் உக்ரைன் முன்வந்துள்ளது.
இதற்கு ஈடாக ரஷ்யாவும் தனது படைகளை அதே தூரத்திற்கு பின்வாங்கச் செய்ய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
ட்ரம்பின் நிர்வாகம்
இந்தப் பகுதிகள் ‘சுதந்திரப் பொருளாதார வலயங்களாக’ மாற்றப்பட்டு உக்ரைன் பொலிஸாரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் என்றும், சர்வதேச படைகள் எல்லைக் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

எனினும், உக்ரைன் முழுமையான இறையாண்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய வரைவு அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்தப் போரை விரைவில் முடிக்க அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்தத் திட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
உக்ரைன் மீண்டும் தாக்கப்பட்டால் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஒருங்கிணைந்த இராணுவப் பதிலடியைக் கொடுக்கும் என்ற வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் இத்திட்டத்தில் கோரப்பட்டுள்ளது.
மேலும், அமைதிக்காலத்தில் உக்ரைன் 8 லட்சம் வீரர்களைக் கொண்ட இராணுவத்தைப் பராமரிக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைதித் திட்டம் தொடர்பாக உக்ரைன் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறிய ஸெலென்ஸ்கி, ரஷ்யா இந்த அமைதி முயற்சியைத் தடுக்க முயன்றால், ட்ரம்ப் உக்ரைனுக்கு அதிகப்படியான ஆயுதங்களை வழங்கி ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பார் என்றும் எச்சரித்தார்.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan