பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு (Video)
வேலன் சுவாமிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரச படைகளின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை அடுத்தே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஊடாக இன்று (30.01.2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பு போராட்டம்
கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் வேலன் சுவாமிகள் பங்கேற்றிருந்தார்.
இதன்போது சட்டவிரோதமான ஒன்றுகூடலில் ஈடுபட்டமை, களேபரத்தில் ஈடுபட்டமை, காயமேற்படுத்தியமை, அரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அத்துமீறி பிரவேசித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வேலன் சுவாமிகள் கடந்த 18 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
பின்னர் அன்று இரவே நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இதன் வழக்கு நாளை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையிலேயே இன்றையதினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
