239 வாகனங்கள் இறக்குமதி..! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கமளித்துள்ளார்.
அதன்படி 239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இராஜாங்க அமைச்சர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், 2021ஆம் ஆண்டிற்குப் பின் எந்தவொரு வாகனமும் இறக்குமதி செய்யப்படவில்லை.
அது குறித்து எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள்
அத்துடன் இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள், வரி செலுத்தாமையால் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
