அமைச்சர்களுக்கான வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு அமைச்சருக்கு முன்னர் மூன்று வாகனங்கள் இருந்ததாகவும், தற்போது அது இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கொடுப்பனவு
அதேவேளை, மாதாந்த எரிபொருள் கொடுப்பனவை 2,250 லீற்றரிலிருந்து 900 லீற்றராகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இது செயல்படுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை அறிவிப்பு ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 10 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
