வாகனங்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் - சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்
தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகர் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (28.07.2026) அதிகாலை சுமார் 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், சிறிய ரக வான் மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சிசிடிவி காட்சிகள் பதிவு
விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச் சென்ற கப் வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
400 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு..! அடுத்த சில வருடங்களில் நாடு திவாலாகிவிடும் என பகிரங்க எச்சரிக்கை



