நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி: எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தீவிர நகர்வு
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (27.07.2026) நடைபெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசரின் ஓய்வு வயது
அரசமைப்பின் 107 (5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய முன்மொழிவின் படி அது 67 ஆண்டுகளாக நீடிக்கப்படவுள்ளது.
அதே பிரிவின் கீழ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 63 ஆண்டுகளில் இருந்து 65 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படவுள்ளது.

எதிர்க்கட்சிகளும் சட்டத்துறை சார் அமைப்புகளும் இதற்குைக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதிலும், அரசு நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டத்தில் தீவிரமாக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
400 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு..! அடுத்த சில வருடங்களில் நாடு திவாலாகிவிடும் என பகிரங்க எச்சரிக்கை
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan