வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடும்
எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
15 வகையான வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
பலர் தற்பொழுது வங்கிகளில் முதலீடு செய்வதனை விடவும் வாகனங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவு செலவழித்து வாகனங்களை கொள்வனவு செய்வதனை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிலைமை வழமைக்கு திரும்யும் எனவும் அவ்வாறு நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் தற்பொழுது கூடுதலாக செலவிடும் பணம் விரயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளினால் வாகன இறக்குமதியாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வெகன் ஆர் மற்றும் பிராடோ ரக வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் உயர்வடையும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri