வாகன இலக்கத் தகடுகளில் ஜனவரி மாதம் முதல் மாற்றம்! நீக்கப்படும் விடயம் குறித்து அறிவிப்பு
வாகன இலக்கத் தகடுகளில் ஜனவரி மாதம் முதல் ஏற்படும் மாற்றம் தொடர்பில் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனப் பதிவுகள்
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

மாகாணங்களுக்கு இடையில் வாகனங்களை விற்பதனாலோ அல்லது மாற்றுவதனாலோ இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியுள்ளது.
இதன்போது, வாகன உரிமையாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுவதால் 2023ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கொண்டுவரப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan