முற்றாக நீக்கப்பட்ட தடை! இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
யட்டியாந்தோட்டை பகுதியில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர், விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6,900 வாகனங்களை இலங்கைக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டது.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள்
அவற்றில் 3,000 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜீப் வண்டிகள் ஆகும்.
அம்பியூலன்ஸ்கள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான வாகனங்கள், தூதரகங்களுக்குத் தேவையான வாகனங்கள் போன்ற பொதுத் தேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதேவேளை, எதிர்காலத்தில் படிப்படியாக இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ Cineulagam
