அதிகரிக்கப்படாத அரச ஊழியர்களின் சம்பளம்! வாகன இறக்குமதியால் நன்மை ஏற்படலாம்

Benat
in பொருளாதாரம்Report this article
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் வரி வருவாயை அதிகரிக்க முடியும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, தனிநபர் வருமானத்திற்கு அறவிடப்படும் வரி விகிதங்களை குறைக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வரிச் சுமையை குறைக்க நடவடிக்கை
தற்போதைய பொருளாதார நிலைக்கு மத்தியில் அரச அல்லது தனியார் பிரிவின் சம்பளம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மக்களின் வரிச்சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு உணவுப் பாதுகாப்பு இல்லாத குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
