வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தொடந்தும் நீடிப்பு!
வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சாத்தியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஓரளவு சாதகமான நிலைக்கு கொண்டு வருவதற்கும் ஒரு வலுவான திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
மேலும், நாட்டின் பொருளாதாரம் குறித்து சிலர் தெரிவித்த கருத்துக்களை தாம் நிராகரிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒரு நிலையான வட்டி விகித முறையைப் பின்பற்றுகிறோம். நிலையான அந்நிய செலாவணி வீத முறையை பராமரிக்க நாங்கள் பணியாற்றுகிறோம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
