வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியினால் பொருளாதாரம் குறிப்பிட்ட மட்டத்தில் உள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ரூபாயின் பெறுமதி ஓரளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் இதனை கொண்டு உடனடியாக வாகன இறக்குமதி செய்ய செல்வது தவறான செயலாகும்.
வாகன இறக்குமதி
அரசாங்கத்திற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்யும் போதும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கொள்வனவு செய்ய வேண்டும்.
நாட்டிற்கு தேவையான வாகன இறக்குமதிகள் செய்தால் மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விசேட குழு
இதேவேளை எதிர்காலத்தில் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அறிவித்தார்.
இது தொடர்பில் ஏற்கனவே விசேட குழுவொன்று தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 மணி நேரம் முன்

இந்த வாரம் விஜய் டிவியில் ஞாயிறு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் சீரியல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam
