வாகனங்களை விடுவிப்பதிலிருந்த தடை: ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை
சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த வாகனங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான பரிசோதனை உறுதிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளும் பணியகத்துக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளது.
விடுவிப்பதில் சிக்கல்
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக வழங்கப்படும் ஜப்பானின் ஏற்றுமதி பரிசோதனை சான்றிதழைப் பெற்றுக் கொண்ட நிறுவனங்களுக்கு அந்த வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜப்பான் உள்ளிட்ட சகல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பரிசோதனை சான்றிதழை ஏற்றுக் கொள்ளும் வகையிலான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பம் மெரஞ்சிகே தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri