அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வரியில்லா வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை கோரிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை கையளித்துள்ளார்.
இருப்பினும், ஜனாதிபதியிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
வரியில்லா வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கோரி ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 116 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் எதிர்ப்பு
எவ்வாறாயினும், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதை ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி.க்களுக்கு வரியில்லா உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
