சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஆதித்யா
சூரியனின் இயக்கத்தைக் காட்டும் புதிய புகைப்படங்களை ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.
அவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திங்கட்கிழமை இன்று (10) வெளியிட்டுள்ளது.
அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை ஆதித்யா எல்-1 படம் பிடித்ததை தொடர்ந்து சூரியனின் இயக்கநிலையை காட்டும் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

லொக்ரேஞ்சியன் புள்ளி
சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 02 ஆம் திகதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது.
பூமியிலிருந்து, 15 இலட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகிலுள்ள, எல் 1 எனப்படும், லொக்ரேஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்தாண்டு (2024) ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.
அந்தவகையில் அண்மையில் ஆதித்யா - எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில், மே மாதத்தின்போது சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பதிவுசெய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam