துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் ஆயிரம் வாகனங்கள்! இறக்குமதியாளர்களின் அவசர செய்தி
துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் ஆயிரம் வாகனங்களை உடனடியாக விடுவிக்குமாறு இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் அவசரக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான எல்லை தாண்டிய கடன் பத்திரங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடிச் சூழலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
நிதி இழப்பு
இந்த பிரச்சினையால் நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல் தாங்கள் கடும் சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதுள்ள சட்ட மற்றும் தொழிநுட்பத் தடைகளைத் தாண்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாகத் தலையிட்டு, இந்த வாகனத் தொகுதியை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று இறக்குமதியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.