வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வாகனங்களின் இறக்குமதியை அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
வாகன சந்தையில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் எங்களின் கையிருப்புத் தொகை நல்ல நிலையில் இல்லை.
இந்த நிலைமையில், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகன இறக்குமதியை படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது “வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டங்கள்” குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக இந்த செயல்முறையை தொடங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடு
இலங்கையின் தற்போதைய கொடுப்பனவு நிலுவை நிலைமை சாதகமாக இல்லை. பெரும்பாலான இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டாலும், வாகன இறக்குமதியில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து
இருப்பினும், அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகன இறக்குமதியை படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளோம்.
இந்த இலக்கை நோக்கிய ஒரு படியாக இந்த ஆண்டு, சுற்றுலாப் போக்குவரத்துக்கான பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
