இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்
புதிய இணைப்பு
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது இன்று (14.3.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
சுனாமி எச்சரிக்கை
மேலும் நிலநடுக்கமானது கிழக்கு போலாங் மோங்கோண்டோ ரீஜென்சிக்கு தென்கிழக்கே 128 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச சியேனி மாவட்டத்தில் நேற்று (13.3.2024) இரவு 8.02 மணியளவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
நில அதிர்வுக்கான தேசிய மையம்
5 கிலோமீட்டர் ஆழத்துக்கு நிலநடுக்க அதிர்வுகள் இருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தெற்கு பகுதியாக இருந்தாலும், மகாரஷ்டிரத்தின் அமராவதி மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் அருகே நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |