அணு ஆயுதப் போருக்குத் ரஷ்யா தயார்: மேற்குலக நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
தொழில்நுட்ப ரீதியாக உக்ரைன் மீதான அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக மேற்குலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பினால், போர் மேலும் சிக்கலடையும் என அவர் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை வெளியிட்டுள்ளார்.
அணு ஆயுத சோதனை
அவர் மேலும் தெரிவிக்கையில், "அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழ்நிலை இல்லை, ஆனால் இராணுவக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் தயாராக உள்ளோம்.
அமெரிக்கா அணுகுண்டு சோதனை நடத்தினால், அந்த சோதனையை நாங்களும் நடத்தவும் தயாராக உள்ளோம்.
இதுவரை உக்ரைனில் நடந்த போரில் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு சில கோட்பாடுகள் உள்ளன.
ரஷ்யாவின் இறையாண்மைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்.
அத்துடன் தங்களின் உத்திகளில் எல்லாம் இருக்கின்றது.எதையும் மாற்றவில்லை"என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |