வாகனங்களின் புகையை பரிசோதிக்கும் வாகனத்தில் இருந்து வெளியான கறுப்பு புகை
நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு வாகனங்களின் புகையை பரிசோதிப்பதற்காக தினமும் பயணிக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வாகனத்தில் இருந்து அதிகளவான கறுப்பு புகை வெளியேறும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.
நுவரெலியாவிலிருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த வாகனம் அதிகளவான கறுப்பு புகையை வெளியிடுவதை வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
புகை சோதனை செய்யும் நடமாடும் வாகனத்தில் வரும் அதிகாரிகள் வாகனத்தில் நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு தினமும் சென்று புகை சான்றிதழ் வழங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையில் மோட்டார் போக்குவரத்து துறையின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம், அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் வழங்குமாறு கோரிக்கையொன்றை அண்மையில் முன்வைத்திருந்தது.
அத்துடன் அதிகளவு புகையை வெளியீடு செய்யும் வாகனங்களை கறுப்பு பட்டியலிட இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதிகளவு புகையை வெளியிடும் வாகனங்கள் சாதாரண நடைமுறையின் கீழ் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள முடியாத வகையில் கறுப்பு பட்டியலிடப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும், அதிகளவு புகை வெளியீடு செய்யும் வாகனங்கள் பற்றிய தகவல்களை 0703500525 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தனியார் பேருந்துக்கள், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலே நுவரெலியாவில் வாகனங்களின் புகையை பரிசோதிப்பதற்காக தினமும் பயணிக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வாகனத்தில் இருந்து அதிகளவான கறுப்பு புகை வெளியேறும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
