வாகனங்கள் குறித்து பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மோட்டார் போக்குவரத்து துறையின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம், அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் வழங்குமாறு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
குறிப்பாக தனியார் பேருந்துக்கள், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து, 070 350 0525 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அறிவிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
புகை பரிசோதனை
இந்நிலையில் மாதத்தின் இறுதி வாரத்தில் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் தனியார் பேருந்துக்களுக்கு புகை பரிசோதனை செய்யப்படுவதாகவும், கடந்த மாத சோதனையில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் புகை பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
