இலங்கையில் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கையில் சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதனை பாராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுதுபார்ப்பு மற்றும் சேவைகளுக்கு பணம் இல்லாததால், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நாடு முழுவதும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன பழுதுபார்ப்பு துறை தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்தன.
இவற்றில் ஏறக்குறைய பாதி வாகனங்கள் முறையான சேவை விநியோகம் இல்லாத காரணத்தால் முற்றிலும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன உதிரிபாகங்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால், பல வாகனங்களில் உதிரி பாகங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதனால் வாகனங்களின் பாவனைக்காலம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் வாகன சேவை வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல வாகனங்களின் சேவை வழங்கல் நேரம் தாண்டிய போதிலும் வாகனங்களை சேவைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு வாகனங்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும், இதற்காக லங்காம டிப்போவை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது லங்காமாவுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கான வழி என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில், கொரோனா காரணமாக நாடு மூடப்பட்டிருந்த காலகட்டத்தில், சரியான சேவை மற்றும் பராமரிப்பு இல்லாததால் ஏராளமான வாகனங்கள் ஓட்டுவதற்கு தகுதியற்றதாக மாறியதாக புதிய வாகனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan