இலங்கையில் கறுப்பு பட்டியலிடப்படும் வாகனங்கள்
அதிகளவு புகையை வெளியீடு செய்யும் வாகனங்களை கறுப்பு பட்டியலிட இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதிகளவு புகையை வெளியிடும் வாகனங்கள் சாதாரண நடைமுறையின் கீழ் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள முடியாத வகையில் கறுப்பு பட்டியலிடப்பட உள்ளது.
திடீரென வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இவ்வாறு கறுப்பு பட்டியலிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையில் சித்தி எய்த தவறும் வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட உள்ளது.
வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் குறிப்பிடத்தக்களவு வாகனங்கள் அதிகளவு புகையை வெளியீடு செய்வது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகளவு புகை வெளியீடு செய்யும் வாகனங்கள் பற்றிய தகவல்களை 0703500525 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
