கொழும்பில் பாரிய மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றிய நபர்: பொலிஸார் விடுக்கும் கோரிக்கை
வாடகைக்கு வாகனங்களை வழங்குவதாக கூறி இணையத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கையடக்க தொலைபேசி மென்பொருள் மூலமாகவும், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஒன்லைனில் விற்பனை செய்து வாடகைக்கு விடும் இணையதளம் மூலமாகவும் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்களுக்கு முன் பணம் வாங்கிக் கொண்டு, வாகனங்கள் வாங்குபவரை தவிர்த்துவிட்டு, தொலைபேசி எண்களை மாற்றி விடுவதாக மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோசடியாளர்கள் மஹரகமவில் உள்ள அரச வங்கிக்கு அருகில் தனது நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
பிரமோத் லியனகே, சதுரங்க டி சண்தல், இரங்க பிரசாத், இரங்க திஸாநாயக்க, பிரதீப் புஸ்பகுமார என்ற பல்வேறு பெயர்களில் இந்தக் மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோசடி செய்பவர் பல்வேறு நபர்களிடம் முன்பணம் பெற்றுக் கொண்ட வங்கிக் கணக்குகள் தங்காலை பகுதியில் உள்ள வங்கி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இவர் ஒருவரிடம் பல தடவைகள் முன்பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர, 2023-ம் ஆண்டுக்கான சமீபத்திய முதலீட்டுத் திட்டங்களைப் போல நடித்து, பல கோடி ரூபாய் அளவுக்கு பெரிய அளவில் மோசடி செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அவரது சமூக ஊடக கணக்குகளில் தோன்றும் சம்பந்தப்பட்ட நபரின் பெயர்கள் மற்றும் அவர் வெளியிட்ட சில விளம்பரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது காணாமல் போயுள்ள இவரைக் கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் உட்பட மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்வர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவரின் மோசடியில் சிக்கியவர்கள் சமூக வலைதள கணக்குகள் மூலம் சம்பந்தப்பட்ட மோசடி நபரின் புகைப்படங்களை வெளியிட்டு அவரது மோசடியை அம்பலப்படுத்தியுள்ளனர்.