முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூட்டில் கைப்பற்றப்பட்ட வாகனத்தின் சாரதிக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு - கற்சிலைமடுவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பிடிக்கப்பட்ட டிப்பர் வாகன சாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வாகன சாரதியை நேற்று (15.03.2024) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மறித்தும் நிக்காமை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதநிலை, வரி காப்புறுதி இல்லாதமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீதிமன்றில் சாரதி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கை
முல்லைத்தீவு - கற்சிலைமடுவில் டிப்பர் வாகனம் மீது நேற்றுமுன் தினம் (14.03.2024) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்டிருந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது சோதனைக்காக மாங்குளம் வீதி ஊடாக ஒட்டிசுட்டான் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் தடுக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த டிப்பர் வாகனம் சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைக்காது தொடர்ந்து பயணித்தமையினால் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் துரத்திப் பிடிக்கப்பட்டு கற்சிலைமடுவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது டிப்பர் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
