கொந்தளித்த வெடுக்குநாறிமலை: டெல்லியின் முடிவு
தமிழர்களின் வழிபாட்டு முறையை தொடர்ச்சியாக குழப்பும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழர்களின் வழிபாட்டு முறை தொடர்ந்து மறுக்கப்படும் செயற்பாடு இலங்கையில் தொடரும் நிலையில், இந்த விடயங்கள் உலக பரப்பில் எடுத்துச்செல்வதன் மூலமே இதற்கான தீர்வினை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை இந்தியா தனது கருத்தினை வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
