வெடுக்குநாறி ஆலய விவகாரம் ஜனாதிபதி தேர்தலில் எதிரொலிக்கும்: சிவசக்தி ஆனந்தன் ஆரூடம்

Vavuniya Ranil Wickremesinghe Sri Lanka Maha Shivratri Election
By Thileepan Mar 09, 2024 10:08 PM GMT
Report

வெடுக்குநாறி ஆலய விவகாரம் தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலில் இந்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களுக்கு ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (09.03.2024)இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

யாழில் 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம்

யாழில் 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம்

மகா சிவராத்திரி நிகழ்வு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவாரத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பூஜை வழிபாடுகளுக்கு சென்ற நிலையில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வருகை தந்து ஆலயத்தின் மகாசிவராத்திரி நிகழ்வுக்கு இடையூறாக செயற்பட்டுள்ளனர்.

முறையற்ற விதத்தில் பொலிஸார் நடந்து கொண்ட நடவடிக்கையானது உலக வாழ் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

வெடுக்குநாறி ஆலய விவகாரம் ஜனாதிபதி தேர்தலில் எதிரொலிக்கும்: சிவசக்தி ஆனந்தன் ஆரூடம் | Vedukunari Temple Issue Vavuniya Press Meet

குறிப்பாக அந்த ஆலயத்தில் தொல்பொருளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வழமையான பூஜை வழிபாடுகளை செய்யலாம் என உத்தரவிட்ட போதும் அந்த வழிபாட்டுக்கு பொலிஸார் இடையூறை ஏற்படுத்தி இரவு மோசமாக நடந்துள்ளார்கள்.

அத்துடன் அங்கு இருந்த பூசகர் உள்ளிட்ட பலரை கைது செய்ததுடன் அவர்களுடைய ஆடைகளை கூட களைந்திருக்கிறார்கள். வழிபாட்டுக்குரிய பொருட்களை நாசம்செய்துள்ளார்கள். தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இது முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும்.

வெடுக்குநாறி ஆலய விவகாரம் ஜனாதிபதி தேர்தலில் எதிரொலிக்கும்: சிவசக்தி ஆனந்தன் ஆரூடம் | Vedukunari Temple Issue Vavuniya Press Meet

தொடர்ச்சியாக அந்த ஆலயத்தில் பொலிஸார் இடையூறை ஏற்படுத்தி வருகிற நிலையில் பௌத்த துறவி ஒருவர் அந்த இடத்திற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் தான் இந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இடையூறு

ஆகவே தொடர்ச்சியாக அந்த ஆலய வழிபாட்டுக்கு அரசாங்கம், அமைச்சர்கள், ஜனாதிபதி இடையூறுகளை செய்து கொண்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.


அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள். வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக ஆளுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருந்து அபிவிருத்தி செய்கின்றோம் என்ற பெயரில் எந்தவித அபிவிருத்தியும் செய்யாது அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் இந்த கெடுபிடிகளுக்கு நீங்கள் மௌனம் சாதித்துக் கொண்டு இருப்பதானது உங்களுக்கு வாக்களித்த வன்னி மக்களுக்கு செய்கின்ற பெரியதொரு துரோகமாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.

வெடுக்குநாறி ஆலய விவகாரம் ஜனாதிபதி தேர்தலில் எதிரொலிக்கும்: சிவசக்தி ஆனந்தன் ஆரூடம் | Vedukunari Temple Issue Vavuniya Press Meet

ஆகவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியோடு பேசி இந்த ஆலயத்தின் வழிபாட்டுக்கு பொலிஸார் தொடர்சியாக மேற்கொள்கின்ற இடையூறுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

அதுவே தான் எதிர்கால உங்கள் அரசியல் பயணத்திற்கும் உதவும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க ஒரு பக்கம் நல்லிணக்கத்தைப் பேசிக் கொண்டு இப்படியான கெடுபிடிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்களிடம் இருந்து குறிப்பாக இந்து கிறிஸ்தவ மக்களிடம் இருந்து வாக்குகளை பெறுவது என்பது கடினமானதாகவே இருக்கும்.

வெடுக்குநாறி ஆலய விவகாரம் ஜனாதிபதி தேர்தலில் எதிரொலிக்கும்: சிவசக்தி ஆனந்தன் ஆரூடம் | Vedukunari Temple Issue Vavuniya Press Meet

இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்துக்கள் அவருக்கான ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் பொலிஸாரின் செயல் தொடர்பில் சீமான் கடும் கண்டனம்

வெடுக்குநாறி மலையில் பொலிஸாரின் செயல் தொடர்பில் சீமான் கடும் கண்டனம்

கணவனின் மோசமான செயலால் அதிர்ச்சியில் மனைவி

கணவனின் மோசமான செயலால் அதிர்ச்சியில் மனைவி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US