வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைதானவர்கள் தொடர்பில் பரவும் போலிச் செய்தி
வெடுக்குநாறிமலை ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சிறைச்சாலையின் ஊடக பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் போலியானவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பரவும் போலியான செய்தி தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொய்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 08 நபர்களில் ஐவர் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்கு நேற்று(13.03.2024) சென்று கைதான நபர்களை பார்வையிட்டிருந்தேன். அவர்கள் நீதிகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
எனினும் கைதானவர்களில் எவரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவில்லை என சிறைச்சாலையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவரது கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |