வவுனியாவில் மரம் முறிந்து வீழந்ததில் அரச விடுதி மற்றும் வர்த்தக நிலையம் சேதம்
வவுனியா(Vavuniya), புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழமையான மரமொன்று பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்ததில் அரச விடுதி ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (16) மதியம் இடம்பெற்றுள்ளது.
பாரிய மரம் முறிவு
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதுடன், காற்றும் வீசி வருகின்றது.
மதியம் வீசிய காற்றின் காரணமாக வவுனியா புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதன்போது மற்றும் ஒரு மரக் கிளை மீது மரம் முறிந்து விழுந்ததால் அந்த மரமும் முறிந்து விழுந்துள்ளது.
மின்சார இணைப்பு
இதன் காரணமாக, அருகில் இருந்து அரச விடுதியின் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் கூரை மற்றும் சுவர் பகுதி என்பன உடைந்து சேதமடைந்துள்ளன
அத்துடன் மின்சார இணைப்பும் அறுவடைந்து மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |