இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தோனேசியர்கள் விடுதலை
இலங்கையில்(Sri Lanka) கைது செய்யப்பட்டிருந்த இந்தோனேசிய(Indonesia) தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் இருந்து இலங்கையின் முஸ்லிம் பிரதேசங்களில் தப்லீக் ஜமாஅத் பணிக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த 8 இந்தோனேசியர்கள் கடந்த 03 ஆம் திகதி நுவரெலிய பள்ளிவாசலில் வைத்து கைது செய்யப்பட்டு - விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தோனேசியர்கள் விடுதலை
சுற்றுலா விசாவில் இலங்கை வந்து மதப்பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் விசா விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த எட்டுப் பேரும் மார்க்கப் பிரச்சாரத்துக்கான விசா அனுமதி பெற்றிருந்தமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
அதனையடுத்து, அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து நுவரெலியா நீதிமன்றத்தினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
