வவுனியா தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டது!
வவுனியா - தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் கோவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை மீறி 50 இற்கும் மேற்பட்டோர் வழிபாடுகளில் ஈடுபட்டதாகச் சுகாதாரப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறிக் குறித்த ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டது.
அத்துடன் ஆலயத்தில் நின்ற 25 பேரினது விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
