நல்லாட்சி இருந்த போது உரிமைகளை கேட்டு பெற்றிருந்தால் தற்போது போராட்டம் நடத்த தேவையில்லை: மஸ்தான் எம்.பி (Photos)

Protest Vavuniya IndependenceDay Goodgovernment
By Thileepan Feb 04, 2022 10:52 PM GMT
Report

தற்போது போராட்டம் நடத்துபவர்கள் நல்லாட்சி இருந்த போது அந்த உரிமைகளை கேட்டு பெற்று இருந்தால் தற்போது போராட்டம் நடத்த தேவையில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா சகாயாமாதபுரம் கிராமத்தில் 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டிடத்தை இன்று (04.02) திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மக்களுக்கு மிகவும் இன்றைய தினம் முக்கிய நாளாகும். அந்நிய ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற ஒரு தினமாகும்.

நல்லாட்சி இருந்த போது உரிமைகளை கேட்டு பெற்றிருந்தால் தற்போது போராட்டம் நடத்த தேவையில்லை: மஸ்தான் எம்.பி (Photos) | Vavuniya Protest Goodgovernment Independenceday

இதன் தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. வன்னி மாவட்டத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு தலைமை தாங்கி இந் நிகழ்வை நான் செய்து வருகின்றேன்.

அந்த வகையில் இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர தினத்தை தலைமையேற்று கொண்டாடினேன். அதே சுதந்திர தினத்தில் எமது கிராமத்திலும் ஒரு நிகழ்வை செய்ய வேண்டும் என்பதற்காக சனசமூக நிலையத்தை கையளிக்கும் நிகழ்வு தற்போது நடைபெறுகிறது.

2019 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டுமாணம் நிர்ணயிக்கப்பட்டாலும் கோவிட் காரணமாக காலதாமதாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம்.

இந்த கிராமத்திற்கு நகரசபை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அதனை நிறைவேற்றியுள்ளோம். அதேபோல் மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றோம்.

நல்லாட்சி இருந்த போது உரிமைகளை கேட்டு பெற்றிருந்தால் தற்போது போராட்டம் நடத்த தேவையில்லை: மஸ்தான் எம்.பி (Photos) | Vavuniya Protest Goodgovernment Independenceday

ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆசிர்வாததத்துடன், நிதி அமைச்சரும், வறுமை ஒழிப்பு ஜனாதிபதியின் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்சவின் அவர்களின் திட்டமிடலில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் 30 இலட்சமும், வட்டாரத்திநற்கு 40 இலட்சமும், ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு 100 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி மூலம் மக்களுடைய வாழ்வாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்திற்கான உரையாடல் ஊடாக அதற்கான வேலைத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டன. நான் ஒருங்கிணைப்பு தலைவராக இருக்கும் மாவட்டங்களில் இயன்றளவு மக்களது வாழ்வாதராத்திற்கு முன்னுரிமையளித்து அந்த நிதிகளை பயன்படுத்தியுள்ளேன்.

அதேபோல், 30 இலட்சத்தில் தெரிவுகள் இடம்பெற்ற போது இங்கும் 100 வீதமும் வாழ்வாதார உதவிக்காக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இங்கு அப்படி ஒன்றும் பயன்படுத்தவில்லை. பொது மக்களுக்குரிய வாழ்வாதாரத்தை கேட்டு நிற்கின்றீர்கள்.

நான் ஒருங்கிணைப்பு தலைவராக இருக்கும் மாவட்டங்களில் மக்களின் வறுமை வீதத்தை இந்த ஆண்டு மூன்றில் ஒன்றாக குறைப்பேன். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். நாம் இந்த நிதிகளை கிராம மட்டங்களில் செயற்படுத்த நடவடிக்கை எடுத்த போது எதிர் தரப்புக்களால் கேளிக்கை செய்யப்பட்டது.

கோவிட் தொற்று காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை பிழையாக செயற்படுத்துவதாக கூறினார்கள். ஆனால் வரவு செலவு திட்டத்தின் மூலம் நிதிகளை ஒதுக்கீடு செய்து மாவட்ட மட்டத்தில் அதனை செய்து காட்டியுள்ளோம்.

நல்லாட்சி இருந்த போது உரிமைகளை கேட்டு பெற்றிருந்தால் தற்போது போராட்டம் நடத்த தேவையில்லை: மஸ்தான் எம்.பி (Photos) | Vavuniya Protest Goodgovernment Independenceday

மக்களை ஏமாற்றவில்லை. உரிய வகையில் அபிவிருத்தி திட்டங்களை தெரிவு செய்தால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். எதிர் காலத்திட்டங்களில் எனது இக் கிராமத்தில் உள்ள மக்களின் தேவைப்பாடுகளையும் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த முயற்சிப்பேன்.

ஒவ்வொன்றுக்கும் போராட்டம் நடத்துபவர்கள் கடந்த நல்லாட்சியில் இருந்தார்கள். அப்போது கேட்டு அதனை கேட்டு பெற்றிருந்தால் இப்போது போராட்டம் நடத்த தேவையில்லை. சுதந்திர தினமன்றும் போராட்டம் நடத்துகிறார்கள்.

5 வருடம் நல்லாட்சி என்று இருந்த போது அந்த உரிமைகளை கேட்டு பெறவில்லை. அதனை பெற்றிருந்தால் இந்த போராட்டம் தேவையில்லை. ஆளும் கட்சியில் இருந்து அபிவிருத்திகளை செய்து உரிமைகளைப் பெறலாம். இது பல இனம், பல மதம் கொண்ட மக்கள் வாழும் நாடு. பல பிரச்சினைகள் இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சினை. ஒவ்வொரு விதமான பிரச்சினை. அந்த பிரச்சனைகளை நாம் ஆளும் கட்சியில் இருப்பதால் எமது உயர் தலைவர்களுடன் பேசி வருகின்றோம்.

நிரந்தர தீர்வு இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழக்கூடிய நிலையை உருவாக்கி வருகின்றோம். ஒவவொரு இனத்திற்கும் பல கலை கலாசார பண்பாடுகள் இருக்கும். அதனை நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். எமக்கு அபிவிருத்தியுடன் கூடிய உரிமைகள் தேவை. அதற்குரிய முயற்சிகளை நாம் எடுப்போம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார். 


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US