வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்! ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி
வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ள அதேவேளை, அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (16.03.2024) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு தமிழ் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாகனப் பேரணி
இந்நிலையிலேயே, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று காலை யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இருந்து வவுனியாவுக்கு வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |