கனடாவை உலுக்கிய படுகொலை: இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான புதிய தகவல்
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.
இலங்கையர்களின் இறுதிக்கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சந்தேகநபர் மீதான விசாரணை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவனில் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்திருந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
மேலும் வழக்கின் சந்தேகநபர் மீதான விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிர் பிழைத்து பலத்த காயங்களுக்கு உள்ளான தனுஷ்க விக்ரமசிங்க இன்று (15) வைத்தியசாலையில் இருந்து வெளியேற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
