கட்சியின் கூட்டங்களுக்கு சபை வாகனத்தை பயன்படுத்தும் வவுனியா பிரதேச சபை தவிசாளர்
கட்சியின் கூட்டங்களுக்கு வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபை வாகனத்தை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஆட்சி அமைத்துள்ள தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த மாதமாக கூட்டத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் தவிசாளருடன் முரண்பட்டு சபையில் இருந்து வெளியேறிய நிலையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி சமரசம் செய்யும் கூட்டம் நெடுங்கேணி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
நிதியை முறைகேடாக செலவு செய்யும் வகையில்
இதன்போது வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி சபை வாகனத்தில் குறித்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
அரசாங்கம் செலவுகளை குறைத்து நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தவிசாளர் இவ்வாறு சபையின் அரச நிதியை முறைகேடாக செலவு செய்யும் வகையில் வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.



