வவுனியா பேராறு நீர்த்தேக்கம் அமைச்சரினால் திறந்து வைப்பு(Video)
வவுனியா நீர் வழங்கல் திட்டத்திற்கான குடிநீர் வழங்கலுக்காகச் சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் 1400 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பெற்ற பேராறு நீர்த்தேக்கத்தினை நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது நீர்த்தேக்கத்தினை பார்வையிட்டதுடன் இவ் நீர்த்தேக்கத்தின் ஊடாக குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், கு.திலீபன் மற்றும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் நீர்த்தேக்கமானது 3.85 எம்.சி.எம் நீர்க்கொள்ளளவை கொண்டதுடன், இவ்
நீர்த்தேக்கம் மூலமாக 23500 பயனாளிகள் பயனடைவது குறிப்பிடத்தக்கது.





இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
